அர்த்தநாரீசுவரர் சிலை

புளியம்பட்டு மாரியம்மன் ஆலயம்

உலகை ஆளும் ஈசன்

திரௌபதி அம்மன் ஆலயம்

பெரியாண்டவர் சன்னதி

ஓங்காரேசுவரர் (சிவன்) திருவுடையார் கோயில்

பிள்ளையார் கோயில்

தேர் வீதிஉலா

அய்யனார் கோயில்

அரசு உயர்நிலைப்பள்ளி

பம்பை ஆறு

சுகாதார நிலையம்

விவசாய நிலங்கள்

நெல் சாகுபடி

பொழுது புலர்தல்

கொக்குகள்

விவசாய நிலத்தில் மயில்

பெரியபாபுசமுத்திரம் (Periyababusamuthiram, Periyababusamudram, Periyababu samuthiram)
தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் ஊராட்சி தகுதியை பெற்றுள்ளது, இக்கிராமம், வானூர் சட்டமன்றத் தொகுதிக்கும், விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி புதுச்சேரி மற்றும் தமிழக எல்லையில் அமைந்துள்ளது.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சியில் மொத்த மக்கள் தொகை 4592. அவர்களில் 2277 பெண்கள் மற்றும் 2315 ஆண்கள். இவர்களில் வன்னிய குல சத்திரிய (வன்னிய கவுண்டர்) சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர், அதற்கு அடுத்தபடியாக ஆதி திராவிடர், நாயுடு, குயவர் மற்றும் வண்ணார் ஆகிய சமூக மக்கள் வசிக்கின்றனர்.
சின்னபாபுசமுத்திரம் தொடருந்து நிலையம், இக்கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தொடருந்து நிலையம் வழியாக புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, திருப்பதி போன்ற பகுதிகளுக்கு தொடருந்துகள் செல்கின்றன.
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, இக்கிராமத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது, தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
• புளியம்பட்டு மாரியம்மன் கோயில்: இக்கிராமத்தில் உள்ள புகழ்ப்பெற்ற கோயில் ஆகும்.
• பெரியாண்டவர் கோயில்: இக்கிராமத்தில் வசிக்கும் சிலருக்கு இது குல தெய்வக் கோயில் ஆகும்.
• ஓங்காரேசுவரர் (சிவன்) திருவுடையார் கோயில்
• திரௌபதி அம்மன் கோயில்
• பிள்ளையார் கோயில்
• பெருமாள் கோயில்
• அய்யனார் கோயில்
• தீப்பாஞ்சம்மன் கோயில்
இக்கிராமத்தில் சுமார் 80 அடி உயர தேர் உள்ளது மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை தேர் திருவிழா நடைபெறுகிறது.
இக்கிராமத்தில் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில், இங்குள்ள புளியம்பட்டு மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம் செய்யப்பட்டு திருவிழா நடத்தப்படுகிறது. மொத்தம் 6 உபயம் உள்ளது, ஒரு நாளுக்கு ஒரு உபயத்தாரர்களால் மாரியம்மனை அலங்கரித்து இரவு சாமி ஊர்வலம் நடத்தப்படுகிறது. இது போல மொத்தம் 6 நாட்கள் நடைபெறும் மற்றும் 7வது நாள் வெள்ளிக்கிழமை அன்று தேர் வீதிஉலா நடத்தப்படுகிறது.
மேலும் அதற்கு அடுத்த வாரம், திரௌபதி அம்மனுக்கு கொடியேற்றம் செய்யப்பட்டு திருவிழா நடத்தப்படுகிறது. மொத்தம் 4 உபயம் உள்ளது, ஒரு நாளுக்கு ஒரு உபயத்தாரர்களால், திரௌபதி அம்மனை அலங்கரித்து இரவு சாமி ஊர்வலம் நடத்தப்படுகிறது. இது போல மொத்தம் 4 நாட்கள் நடைபெறும் மற்றும் 5வது நாள் வெள்ளிக்கிழமை அன்று தீமிதி திருவிழா நடத்தப்படுகிறது.
ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை அன்று புளியம்பட்டு மாரியம்மனுக்கு கூழ் வைத்து படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெறும். மேலும் ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் சிவனுக்கு வழிபாடு செய்து ஆறுகால பூசை நடைபெறும்.
பொருளாதாரம் :
இக்கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர். இங்கு நெல், கரும்பு, உளுந்து, மரவள்ளி போன்றவை முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் சிலர் அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள். இங்குள்ள பம்பை ஆறு, ஏரி மற்றும் குளங்கள் கிராமத்திற்கு மிகவும் அழகு சேர்ப்பதோடு விவசாயத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
காலநிலை :
பெரியபாபுசமுத்திரத்தின் காலநிலை, கோப்பன் காலநிலை வகைப்பாட்டின்படி, வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, இது கடலோர பாண்டிச்சேரியைப் போன்றது. கோடை ஏப்ரல் முதல் சூன் ஆரம்பம் வரை நீடிக்கும், அப்போது அதிகபட்ச வெப்பநிலை 41 °C (106 °F) ஐ எட்டக்கூடும். சராசரி அதிகபட்ச வெப்பநிலை 36 °C (97 °F). குறைந்தபட்ச வெப்பநிலை 28–32 °C (82–90 °F) ஆக இருக்கும். இதைத் தொடர்ந்து சூன் முதல் செப்டம்பர் வரை அதிக ஈரப்பதம் மற்றும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் நடுப்பகுதியில் தொடங்குகிறது, மேலும் பெரியபாபுசமுத்திரம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அதன் வருடாந்திர மழையின் பெரும்பகுதியைப் பெறுகிறது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 1,355 மில்லிமீட்டர்கள் அல்லது 53 அங்குலங்கள் ஆகும். குளிர்காலம் மிகவும் வெப்பமாக இருக்கும், அதிகபட்சம் 30 °C (86 °F) மற்றும் குறைந்தபட்ச மழை பெரும்பாலும் 18–20 °C (64–68 °F) வரை குறைகிறது.
* பிள்ளையார் கோயில் தெரு
* ஆலஞ்சாலை
* தேரடிதெரு
* அண்ணா நகர்
* வானூர் ரோடு
* குயவர் தெரு
* பாரதி வீதி
* குறுக்கு தெரு
* ஏரிக்கரை தெரு
* பெரியாபாபுசமுத்திரம் காலனி
இந்த ஊராட்சியில் மொத்தம் 4 சிற்றூர்கள் அமைந்துள்ளன, அவைகளின் பட்டியல்:
^ ரசபுத்திரப்பாளையம்
^ வானத்தம்பாளையம்
^ குயிலாப்பாளையம்
^ வினாயகம்பட்டு (சில பகுதிகள்)
* அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.)
* பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க)
* திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.)
# புதுச்சேரி (18 கி.மீ.)
# கண்டமங்கலம் (3 கி.மீ.)
# வில்லியனூர் (11 கி.மீ.)
# மதகடிப்பட்டு (8 கி.மீ.)
# திருக்கனூர் (12 கி.மீ.)
# வானூர் (17 கி.மீ.)
# சேதராப்பட்டு (16 கி.மீ.)
• அரசு உயர்நிலைப்பள்ளி
• அங்கன்வாடி மையம்
• துணை சுகாதார நிலையம்
• கிராம நிர்வாக அலுவலகம்
• ஊராட்சி மன்ற அலுவலகம்
• நியாயவிலை கடை
• அஞ்சல் நிலையம்
• நூலகம் (தற்போது செயலில் இல்லை)


அனைத்து உயிரினம் மீதும் அன்பை விதைப்போம்!!!💖💖 - கெளதம் சம்பத்
ஊராட்சி விவரங்கள் :
மண்டலம் : தொண்டை மண்டலம் (பல்லவ நாடு)
மாவட்டம் : விழுப்புரம்
வட்டம்: விக்கிரவாண்டி
சட்டமன்றத் தொகுதி: வானூர்
மக்களவைத் தொகுதி: விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு :
மொத்தம் :
மக்கள்தொகை :
மொத்தம் : 4520
ஆண்கள் : 2275
பெண்கள்: 2245
![]() |

Content owned and Maintained by: Gowtham Sampath.
Site Designed and Developed by: Gowtham Sampath & blogspot.
Queries/Comments regarding the content on this site may be sent to web admin
Mail id: gowthamsampath1412@yahoo.com
Disclaimer | Privacy and Copyright policy | Terms of Use | FAQ | copyright@2025